என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘கூகுள் மீட்’ மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள்
Byமாலை மலர்13 Aug 2021 9:40 AM GMT (Updated: 13 Aug 2021 9:40 AM GMT)
10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘வாட்ஸ் ஆப்’ குழு தொடங்கப்பட்டு அதில் ஆசிரியர்கள் கற்பிக்கும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
குடிமங்கலம்:
உடுமலை கல்வி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ‘ஆன்லைன்’ வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அதில் ஒன்று முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி மற்றும் ‘யூ டியூப்’ சேனலில் பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.
அதேநேரம் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘வாட்ஸ் ஆப்’ குழு தொடங்கப்பட்டு அதில் ஆசிரியர்கள் கற்பிக்கும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. சில பள்ளிகளில் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் ஜூம், கூகுள் மீட் உள்ளிட்ட இணையதளங்கள் வழியே ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை ‘கூகுள் மீட்’ இணையதளத்தை பயன்படுத்தி பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தலைமையாசிரியர் பழனிசாமி கூறியதாவது:
தற்போது அனைத்து வகுப்பு ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிகின்றனர். இதனால் கூகுள் மீட் பயன்படுத்தி ஆன்லைன் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு பாட வேளையை 30 முதல் 45 நிமிடங்களாக நிர்ணயித்து அட்டவணை தயாரிக்கப்படுகிறது. அதில் 9-ம் வகுப்பு வரை ஒரு நாளில் ஒரு பாட வேளை மட்டுமே நடத்தப்படுகிறது.
அதேநேரம் 10 முதல் 12-ம் வகுப்பு வரை வழக்கமான நேரடி வகுப்புகளை போல் காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை அனைத்து பாடங்களும் நடத்தப்படுகின்றன. இதில் 60 முதல் 70 சதவீதம் மாணவர்களின் வருகை உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கூறினார்.
Next Story
×