என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு
Byமாலை மலர்30 July 2021 11:34 AM GMT (Updated: 30 July 2021 11:34 AM GMT)
ஆடி கிருத்திகையையொட்டி 2-ந்தேதி சிறப்பு பூஜையும், 3-ந்தேதி ஆடி பெருக்கன்று ஷோடச அபிஷேகம், மகா தீபாராதனை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
திருப்பூர்:
ஆடி 2-ம் வெள்ளிக்கிழமையையொட்டி திருப்பூர் மாநகர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில், பெருமாநல்லூர் குண்டத்து காளியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், செரீப் காலனியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது.
இதே போல் உடுமலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து ஆடி கிருத்திகையையொட்டி 2-ந்தேதி சிறப்பு பூஜையும், 3-ந்தேதி ஆடி பெருக்கன்று காலை 7 மணிக்கு ஷோடச அபிஷேகம், மகா தீபாராதனை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
இதே போல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. ஆடிமாதத்தில் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் கோவில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் பக்தர்கள் காப்பு கட்டுவது, விரதம் இருப்பது போன்ற வழிபாட்டு முறைகளை செய்யமுடியவில்லை. எனவே திருவிழாக்கள் நடத்திட அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×