search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் அரண்மனைபுதூர்  மாநகராட்சி பள்ளியில்  தடுப்பூசி செலுத்த நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.
    X
    திருப்பூர் அரண்மனைபுதூர் மாநகராட்சி பள்ளியில் தடுப்பூசி செலுத்த நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.

    தடுப்பூசி செலுத்த ஆர்வத்துடன் குவியும் பொதுமக்கள்

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 162 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 261-ஆக உள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று ஒரு நாளில் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 87 ஆயிரத்து 398-ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 162 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 261-ஆக உள்ளது. 

    மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,321 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை தற்போது 816-ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக முன்னதாகவே டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது.

    ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கீழ் உள்ள பள்ளிகளில் தடுப்பூசி போடப்படுகிறது. இன்று  34 பள்ளிகளில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
    Next Story
    ×