search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆக்கிரமிப்புகளை தடுக்க கிராமங்களில் நீர்நிலைகளை ஆய்வு செய்ய கோரிக்கை

    ஒன்றிய மற்றும் வருவாய் அதிகாரிகள் கிராமங்கள் தோறும் ஆய்வு நடத்தி நீர்நிலைகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
    மடத்துக்குளம்:

    உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் பருவநிலை மாற்றங்கள், பருவமழை பொய்த்தல் ஆகியவை காரணமாக நீர்நிலைகள் வறண்டு  நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

    தூர்வாரப்படாத பல நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டும், குப்பை கொட்டப்பட்டும்  தூர்ந்து போய் வருகின்றன. தூர்ந்து போன நிலையில் உள்ள நீர் நிலைகளில் மழைநீர் தேங்காமல் வழிந்தோடுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

    தற்போது சில கிராமங்களில் கிணறு மற்றும் குட்டையை கற்களால் மூடும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக  புகார் எழுகிறது.நீர் நிலைகளுக்குச்செல்லும் நீர்வழிப்பாதைகள், குளக்கரைகள் ஆகியவற்றை ஆக்கிரமிக்கக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டு வழிமுறைகள் மீறப்பட்டு வருகின்றன. எனவே நீர்நிலைகளை முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது.

    எனவே ஒன்றிய மற்றும் வருவாய் அதிகாரிகள் கிராமங்கள் தோறும் ஆய்வு நடத்தி நீர்நிலைகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:-

    நீர்நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கிராமங்களில் குட்டை, ஏரி, குளம் ஆகியவற்றை மூடும் முயற்சியில் எவரேனும் ஈடுபட்டால் கண்டறிந்து தடுக்க வேண்டும்.தவிர நீர்நிலைகளில் கொட்டப்படும் கழிவுகளை அப்புறப்படுத்த அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
    Next Story
    ×