search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்னம்பாளையம் மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்.
    X
    தென்னம்பாளையம் மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்.

    கொட்டும் மழையிலும் கடைகள்-மார்க்கெட்டுகளில் குவிந்த பொதுமக்கள்

    மீன்களை மொத்த விலைக்கு வாங்கிய நடைபாதை வியாபாரிகள் சிலர் மார்க்கெட் சாலையில் கடைகளை போட்டு வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் பகுதியில் இன்று காலை 5 மணி முதலே சாரல் மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. அதையும் பொருட்படுத்தால் பொதுமக்கள் குடைகளை பிடித்தப்படி  மார்க்கெட்டுகள், கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

    தென்னம்பாளையம்  மார்க்கெட் சாலையின் இருபுறமும் நடைபாதை கடைகள் மற்றும் வாகனங்கள் ஆக்கிரமித்து இருந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். 

    தொடர்ந்து வாகனங்களால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.மீன்களை மொத்த விலைக்கு வாங்கிய நடைபாதை வியாபாரிகள் சிலர் மார்க்கெட் சாலையில் கடைகளை போட்டு வியாபாரத்தில் ஈடுபட்டனர். 

    மத்தி மீன் கிலோ ரூ.250&ல் இருந்து குறைந்து ரூ.200&க்கும், வஞ்சரம் ரூ.1000&ல் இருந்து ரூ.1100&க்கும், சங்கரா ரூ.400&ல் இருந்து ரூ.350 க்கும், கட்லா ரூ.150 க்கும், நெய்மீன் ரூ.120 க்கும், நெத்திலி ரூ.250க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

    இதனை இறைச்சி பிரியர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதே போல் காய்கறி கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. கத்தரிக்காய் ரூ.20 முதல் ரூ.40 வரையிலும், பாகற்காய் ரூ.30 முதல் 40 வரையும், பீட்ரூட் ரூ.40 முதல் ரூ.50 வரையும், பீன்ஸ் கிலோ ரூ.70 முதல் 80 வரையும், முருங்கைகாய் ரூ.2, அவரை ரூ.50க்கும், தேன்வாழை ரூ.34க்கும், செவ்வாழை ரூ.42 க்கும், விற்பனை செய்யப்பட்டது.  

    மழையால் நடைபாதை வியாபாரிகள் தலையில் பிளாஸ்டிக் கவரை அணிந்தும், குடைப்பிடித்தபடியும் வியாபாரத்தில் ஈடுபட்டனர். கிடைத்த விலைக்கு பழங்கள், காய்கறிகளை விற்பனை செய்து விட்டு சென்றனர்.

    Next Story
    ×