search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    மகளிருக்கு கட்டணமில்லா டிக்கெட் வழங்குவது ஏன்?-அதிகாரிகள் விளக்கம்

    சாதாரண கட்டண அரசு பஸ்களில் மகளிர் எத்தனை பேர் பயனடைகின்றனர் என்ற விவரம் சரிவர தெரியாமல் இருந்தது.
    உடுமலை:
    தமிழக அரசு உத்தரவுப்படி சாதாரண கட்டண அரசு டவுன் பஸ்களில் மகளிர் இலவசமாக பயணித்து வருகின்றனர்.

    இந்நிலையில்  டவுன் பஸ்களில் பயணிக்கும் மகளிருக்கு கட்டணமில்லாத டிக்கெட் வழங்கப்பட்டும் வருகிறது. இதனை பரிசோதகர் ஆய்வு நடத்தி  உறுதி செய்தும் வருகிறார்.

    இதன் வாயிலாக  மகளிர் பயணிக்கும் எண்ணிக்கை  தினமும், கணக்கிடப்படுகிறது.

    இது குறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:-

     சாதாரண கட்டண அரசு பஸ்களில்  மகளிர் எத்தனை பேர் பயனடைகின்றனர் என்ற விவரம் சரிவர தெரியாமல் இருந்தது.

    தற்போது  இலவச பயணத்தை உறுதி செய்ய டிக்கெட் வழங்கப்படுகிறது. தவிர அந்த பஸ்சில் நிர்ணயிக்கப்பட்டுள்ள டிக்கெட் கட்டணத்தொகையை கணக்கிட்டு ஒவ்வொரு கோட்டத்தில் இருந்தும்  தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

    பின்  அரசிடம் இருந்து மானியம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.அதன்படி  ஒவ்வொரு பஸ்சிலும் விடுபடாமல் மகளிர் அனைவருக்கும் கட்டாயமாக கட்டணமில்லா டிக்கெட் வழங்க  கண்டக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு  அவர்கள் கூறினர்.

    Next Story
    ×