search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    பாரம்பரிய விளையாட்டுக்களில் ஆர்வம் காட்டும் மாணவர்கள்

    வீட்டில் இருந்தே ‘ஆன்லைன்’ வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுகின்றனர்.
    உடுமலை:

    மாணவ, மாணவிகள்  மத்தியில் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. கபடி, கோ-கோ, கூடைபந்து, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளில் மாணவ, மாணவிகள்  திறமையை வெளிப்படுத்தி  வெற்றி பெறுகின்றனர்.

    ஆனால், கொரோனா பரவலால் பள்ளிகள் செயல்படாத நிலையில், இத்தகைய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவதும் தடைபட்டுள்ளது.
    வீட்டில் இருந்தே ‘ஆன்லைன்’ வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுகின்றனர்.

    அமர்ந்த இடத்தை விட்டு நகராமல் மணிக்கணக்கில் ‘கேம்‘ விளையாடி பொழுதை கழிக்கின்றனர். அதேநேரம்  உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில்  சில மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டிற்கு திரும்பி உள்ளனர். கில்லி தாண்டு, பம்பரம் விடுதல், தாயம் உள்ளிட்ட விளையாட்டுகள் வாயிலாக பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
    Next Story
    ×