search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சாகுபடிக்கான இடுபொருட்கள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

    சாளையூர், குறிச்சிக்கோட்டை துணை வேளாண் விரிவாக்க மையங்களில் உயிர் உரங்கள், நுண்ணூட்டம் ஆகிய இடுபொருட்கள் இருப்பு உள்ளது.
    உடுமலை:

    உடுமலை வட்டாரத்தில் ஆடிப்பட்டத்துக்கான சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள், இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி அறிக்கையில், நடப்பு சீசனில் விவசாயிகள் தேவைக்காக நெல் கோ 51, உளுந்து, கொண்டைக்கடலை, நிலக்கடலை, சோளம் விதைகள், நுண்ணுயிர் உரங்கள், சிறுதானிய நுண்ணூட்டம், பயறு வகை, தென்னை நுண்ணூட்டம் ஆகியவை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சாளையூர், குறிச்சிக்கோட்டை துணை வேளாண் விரிவாக்க மையங்களில் உயிர் உரங்கள், நுண்ணூட்டம் ஆகிய இடுபொருட்கள் இருப்பு உள்ளது.

    விதை விற்பனை உரிமம் உள்ள விதைகளும், விரைவில் துணை வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட உள்ளது.மேலும் விபரங்களுக்கு உடுமலை-1 பாலசுப்பிரமணியம் 9843900274, உடுமலை-2 முருகானந்தம் 8248728010, குறிச்சிக்கோட்டை அமல்ராஜ் 9751293606,வைரமுத்து வாளவாடி 9865939222, சாளையூர் மார்க்கண்டன் 9894936328 ஆகியோரை செல்போன் எண்களில் சம்பந்தப்பட்ட பகுதி விவசாயிகள் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×