search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிறுதானிய விற்பனை அங்காடிகள் திறப்பு-விவசாயிகள் எதிர்பார்ப்பு

    இயற்கை வேளாண்மையால் உருவாக்கப்படும் சிறுதானிய பொருட்களை எளிதில் கிடைக்கச்செய்ய வேண்டும்.
    உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் மண் வளத்தையும், இயற்கை வளத்தையும் பேணிக்காக்கும் பொருட்டு இயற்கை வேளாண்மை மேற்கொள்ளப்படுகிறது. சில விவசாயிகள், ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து இயற்கை உரங்களை பயன்படுத்துகின்றனர். மேலும் தரமான விதை மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை மேலாண்மையை கடைபிடிக்கின்றனர்.

    அவ்வகையில் சோளம், கம்பு, பயறு வகைகளான தட்டை, பாசிப்பயறு, கொள்ளு, உளுந்து, சிறு தானியங்களான ராகி, தினை, வரகு, உள்ளிட்ட சிறு தானிய சாகுபடியில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், சாகுபடி பரப்பு குறைவாக உள்ள இடங்கள் மற்றும் பரப்பு குறைந்த இடங்களில், தானிய பயிர்கள் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அலுவலர்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே விளைபொருட்களின் மதிப்பை உயர்த்தும் பொருட்டும் அதன் தரத்தை வேறுபடுத்தி காட்டுவதற்காகவும் வேளாண்துறையால் அங்காடி திறக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:

    ‘நகர்ப்புற மக்களுக்கு இயற்கை வேளாண்மையால் உருவாக்கப்படும் சிறுதானிய பொருட்களை எளிதில் கிடைக்கச்செய்ய வேண்டும். அதற்கு வேளாண்துறையால் அங்காடிகள் திறக்க வேண்டும். அதில் விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டால் நியாயமான விலை கிடைக்கும். தவிர  நுகர்வோர் அனைவரும் தங்களது தேவைகளை நேரடியாகவே விவசாயிகளிடம் தெரிவிக்க முடியும் என்றனர்.
    Next Story
    ×