search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    வேலைவாய்ப்பை அதிகரிக்க வெளி மாவட்டங்களில் ஜவுளி பூங்காக்கள்- பின்னலாடை நிறுவனங்கள் யோசனை

    வெளிநாட்டுப்பயணம் எளிதாக இருந்ததால் வர்த்தகர்கள், வர்த்தக முகமையினரின் நேரடித்தொடர்பு திருப்பூருக்கு எளிதாக இருந்தது.
    திருப்பூர்:

    கொரோனா  காரணமாக திருப்பூரில்  சாம்பிள் ஆடைகளை காட்சிப்படுத்துதல்  தொடங்கி நிறுவனம் குறித்து அறிந்து கொள்ளல் என அனைத்துமே தற்போது ஆன்லைன்  மையமாக மாறியிருக்கிறது.வெளிநாட்டு வர்த்தகர்கள், வர்த்தக முகமைகள் மூலம்  திருப்பூர் நிறுவனங்கள் ஆர்டர்களை பெறுகின்றன.

     வெளிநாட்டுப்பயணம் எளிதாக இருந்ததால் வர்த்தகர்கள், வர்த்தக முகமையினரின் நேரடித்தொடர்பு திருப்பூருக்கு எளிதாக இருந்தது.தற்போது வேறு  வழியில்லாததால்  உதவிகரமாக  ஆன்லைன்   தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. ஆடைக்கண்காட்சி முதற்கொண்டு இம்முறையில் நடக்கின்றன. இதன் மூலம்,ஆர்டர்களைப் பெற முடிகிறது. புதிய வர்த்தகர்கள் கூட கிடைக்கின்றனர். ஆனால் டிஜிட்டல் ஸ்டுடியோ போன்ற கட்டமைப்புகள் இன்னும் பெருக வேண்டும்.  இதற்கு சற்று கூடுதல் காலம் தேவைப்படும்.

    மேலும் ஊரடங்கின்போது தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றனர். தளர்வு ஏற்படும்போது அவர்கள் திருப்பூர் திரும்புவதற்கு காலதாமதமாகிறது. திருப்பூரின் விரிவாக்கம், மாநிலம் முழுமைக்கும் படர வேண்டும் என்ற முயற்சி இதன் அடிப்படையில் எழுந்ததுதான். இருப்பினும், இதற்கான விரிவான செயலாக்கம் என்பது இன்றியமையாததாக மாறியிருக்கிறது.

    வெளிமாவட்டங்களில் ஜவுளிப்பூங்காக்கள் துவங்குவது, பின்னலாடை தொழில் விரிவாக்கத்துக்கு கைகொடுப்பதாக இருக்கும். குறிப்பாக தொழிலாளர்களுக்கு அவரவர் சொந்த மாவட்டங்களிலேயே வேலைவாய்ப்பு தரும் வகையில், பின்னலாடைத்துறையினரின் யோசனை அமைகிறது.

    தொழிலாளர் பற்றாக்குறை, அதிலும் திறன் வாய்ந்தவர்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாக மாறி வருகிறது. இது தொழில்துறையினர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பல நேரங்களில் தடையாகவும் மாறியிருக்கிறது.இத்தடையை அகற்றுவதற்கான தீவிர முயற்சி தற்போது  தொடங்கியுள்ளது.
    Next Story
    ×