search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செடி முருங்கை.
    X
    செடி முருங்கை.

    செடி முருங்கை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

    அனைத்து வகை மண்ணிலும் செடி முருங்கை வளரும். அதிக தண்ணீர் தேவைப்படுவதில்லை.
    உடுமலை:

    தண்ணீர் குறைவாக தேவைப்படும் செடி முருங்கை சாகுபடியில் உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக வறட்சியை தாங்கி வளர்ந்து பலன் தரும் முருங்கை ரகங்களை விவசாயிகள் தேர்வு செய்கின்றனர்.

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் இச்சாகுபடி பரப்பு குறைவாக உள்ளது. தற்போது நிலையான வருவாய் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்  சொட்டு நீர் பாசனம் அமைத்து செடி முருங்கை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    கணபதிபாளையம், பொன்னாலம்மன்சோலை உள்ளிட்ட பகுதிகளில் செடி முருங்கை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், அனைத்து வகை மண்ணிலும் செடி முருங்கை வளரும். 

    அதிக தண்ணீர் தேவைப்படுவதில்லை. பயிரிட்ட 6 மாதத்தில் காய்க்க துவங்கி 3 ஆண்டுகள் வரை மகசூல் தரும் ரகங்களை தேர்வு செய்கிறோம். சராசரியாக 2.47 ஏக்கருக்கு 50 டன் விளைச்சல் கிடைக்கும். 

    சொட்டுநீர் பாசனம் வாயிலாக உரம் மற்றும் நீர் செலுத்துகிறோம். பருவநிலை மாற்றங்களால் பூ மொட்டு துளைப்பான் மற்றும் பழ ஈ தாக்குதல் ஏற்படுகிறது. உள்ளூர் சந்தைகளிலேயே காய்களை சந்தைப்படுத்தி வருகிறோம் என்றனர்.
    Next Story
    ×