search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கற்பித்தல் பயிற்சி வீடியோ ஒளிப்பதிவு

    வீடியோக்கள் அனுபவம் மற்றும் திறமைவாய்ந்த ஆசிரியர்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
    திருப்பூர்:

    ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மாவட்டம்தோறும் செயல்படுகிறது. இதன்மூலம் அனைத்து வகுப்பு ஆசிரியர்களுக்கும் கற்பித்தல் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதற்கு உறுதுணையாக கடினமான பாடங்களை எளிமையாக கற்பிப்பது குறித்த வீடியோக்கள் அனுபவம் மற்றும் திறமைவாய்ந்த ஆசிரியர்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

    கோவை மாவட்ட பயிற்சி நிறுவனம் சார்பில் பிளஸ்-2 வகுப்புக்கான உணவக மேலாண்மை பாடப்பிரிவு சார்ந்த வீடியோக்கள் திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.ஆசிரியர் வின்சி பயிற்சி வழங்கினார். பயிற்சி நிறுவன முதல்வர் ராஜா, ஆசிரியர் மகேஸ்வரி, பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
    Next Story
    ×