search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மா உணவகத்தில் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் சாப்பிட்ட காட்சி.
    X
    அம்மா உணவகத்தில் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் சாப்பிட்ட காட்சி.

    அம்மா உணவகத்தில் இட்லியை ருசித்து சாப்பிட்ட மாநகராட்சி கமிஷனர்

    உணவு தரமாக உள்ளது. இதுபோல் எந்த குறையுமின்றி தொடர வேண்டும் என பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் தென்னம்பாளையம் சந்தை பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடைகளில் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளி பின்பற்றியும் உள்ளனரா? என ஆய்வு செய்தார்.

    திருநீலகண்டபுரத்தில் சாக்கடை கால்வாய் அடைப்பு குறித்து வந்த புகாருக்கு அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். அப்பகுதியில்  ஒரு இடத்தில் கட்டுமானப் பொருட்கள் குவித்து வைத்து கால்வாய் அடைக்கப்பட்டதை கண்டறிந்த அவர், உடனடியாக அதை அப்புறப்படுத்தி கால்வாய் அடைப்பு சரிசெய்ய நடவடிக்கை எடுத்தார்.

    சின்னசாமியம்மாள் பள்ளி அருகே உள்ள அம்மா உணவகத்தில் நுழைந்த அவர் பொதுமக்களிடம் உணவு தரம் குறித்து கருத்து கேட்டார். ஒரு தட்டில் இட்லி, சட்னி, சாம்பார் வாங்கி பொதுமக்களுடன் சேர்ந்து ருசித்து சாப்பிட்டார். உணவு தரமாக உள்ளது. இதுபோல் எந்த குறையுமின்றி தொடர வேண்டும் என பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.
    Next Story
    ×