search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மரக்கன்றுகள் பராமரிப்பில் ஊரக திட்ட பணியாளர்கள்-கிராமிய மக்கள் இயக்கம் வலியுறுத்தல்

    ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களைக்கொண்டு மரக்கன்றுகள் நடவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் தொரவலூரை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் கிராமிய மக்கள் இயக்கம் என்ற பொதுமக்கள் அமைப்பு கிராமப்புறங்களில் ஏற்கனவே இருந்த பசுமையை மீட்கும் வகையில் குளக்கரைகளில் பனை விதைகள் விதைத்தல், மரக்கன்றுகள் நடவு செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

    இந்நிலையில் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தொரவலூரை சேர்ந்த எம்.எஸ்.சம்பத்குமார் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட கலெக்டர் வினீத்தை சந்தித்து மரக்கன்று வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். 

    பின்னர் எம்.எஸ்.சம்பத் குமார் கூறும்போது, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களைக்கொண்டு மரக்கன்றுகள் நடவு செய்தல் அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நடவு செய்யப்படும் மரக்கன்றுகள், முறைப்படி தண்ணீர் விட்டு பராமரிக்கப்படுவதில்லை. இதனால் அவை கருகி விடுகின்றன. பின்னர் அதே இடத்தில் மீண்டும் மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன. இதைத்தவிர்க்க வேண்டுமென்ற நோக்கில் திருப்பூர் மாவட்டத்தில் நடவு செய்யப்படும் மரக்கன்றுகளை மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களைக்கொண்டே பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிராமங்களில் மலைபோல குவியும் பிளாஸ்டிக் கழிவுகளை கையாளும் வகையில் மாசுபாடு இல்லாத இன்சினரேட்டர் கட்டமைப்புகளை உருவாக்கி தர வேண்டும். குப்பையை சேகரிக்கும் பேட்டரி வண்டிகள் இல்லாத கிராம பஞ்சாயத்துகளுக்கு பேட்டரி வண்டிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளோம். 

    கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், இன்சினரேட்டர் கோரிக்கையை மட்டும் பரீசிலித்து நடவடிக்கை எடுப்பதாகவும் கலெக்டர் தெரிவித்ததாக கூறினர்.
    Next Story
    ×