search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஜிபி சைலேந்திரபாபு
    X
    டிஜிபி சைலேந்திரபாபு

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க குற்றங்களை தடுக்க நடவடிக்கை: டி.ஜி.பி. சைலேந்திரபாபு

    காவல் துறையினரின் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
    சென்னை:

    தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக பதவி ஏற்றுக்கொண்ட சைலேந்திர பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் பணி எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது அரிய வாய்ப்பாகும். இந்த வாய்ப்பை அளித்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்றவும், குற்றங்களை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    தமிழகம் முழுவதும் பொதுமக்கள் முதல்-அமைச்சரிடம் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்படும்.

    முக ஸ்டாலின்

    30 நாளில் இது தொடர்பாக முதல்-அமைச்சரிடம் அறிக்கை வழங்கப்படும். காவல் துறையினரும் பொதுமக்களும் நல்லுறவோடு செயல்பட வேண்டும். காவலர்கள் பொதுமக்களை மனிதாபிமானத்தோடும், மரியாதையோடும் நடத்த வேண்டும்.

    மனித உரிமைகளை மீறும் வகையில் செயல்படக்கூடாது. காவல் துறையினரின் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    பின்னர் நிருபர்கள் அவரிடம் ஆன்லைன் மோசடி உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

    அதற்கு பதில் அளித்த சைலேந்திரபாபு, ‘‘இப்போது தான் பொறுப்பேற்றுள்ளேன். உங்களின் அனைவரது கேள்விகளுக்கும் இப்போது பதில் அளிக்க முடியாது. ஆனால் எனது நடவடிக்கைகள் பேசும்படி இருக்கும்’’ என்றார்.

    Next Story
    ×