search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரியில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    தர்மபுரியில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

    புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தர்மபுரி, பென்னாகரத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தர்மபுரி:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். தொ.மு.ச. மாவட்ட செயலாளர் சண்முகராஜ், நிர்வாகிகள் அன்புமணி, சின்னசாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், பொது செயலாளர் மணி, நிர்வாகி வணங்காமுடி, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட தலைவர் ராஜேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மல்லையன், மாவட்ட செயலாளர் அர்ஜூனன், ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட நிர்வாகிகள் முருகன், கோவிந்தராஜன், மக்கள் அதிகாரம் நிர்வாகிகள் முத்துக்குமரன், கோபிநாத் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள்.

    இதேபோன்று பென்னாகரம் பழைய பஸ் நிலையம் அருகே சி.ஐ.டி.யு., தொ.மு.ச. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட துணைத்தலைவர் ராஜி தலைமை தாங்கினார். இ்தில் போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகி மனோன்மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி அன்பு, நகர செயலாளர் வெள்ளிங்கிரி, மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

    ஆா்ப்பாட்டத்தில் தொழிலாளர்களை பாதிக்கும் 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகள், விவசாயிகளை பாதிக்கும் புதிய வேளாண் திருத்த சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் கொள்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள், பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள், பிரதிநிதிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×