search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குண்டடம் பகுதியில் வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள்.
    X
    குண்டடம் பகுதியில் வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள்.

    வேரோடு வெட்டி சாய்க்கப்படும் மரங்கள் - சமூக ஆர்வலர்கள் வேதனை

    குண்டடம் பகுதியில் நெடுஞ்சாலை ஓரங்களில் ஏராளமான மரங்கள் வளர்ந்து வாகன ஓட்டிகளுக்கு நிழல் தருகின்றன.
    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் குண்டடத்தில் இருந்து கோவை செல்லும் சாலையில் ருத்ராவதி வாய்க்கால் பாலம் அருகே வேல், புளியன், வேம்பு உள்ளிட்ட மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த வழியாக செல்லும் உயரழுத்த மின் கம்பியில் இந்த மரங்களின் கிளைகள் உரசுவதால் நெடுஞ்சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள மரங்களை மின் வாரிய ஊழியர்கள் அடியோடு வெட்டிச்சாய்க்கின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதியைச்சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், குண்டடம் பகுதியில் நெடுஞ்சாலை ஓரங்களில் ஏராளமான மரங்கள் வளர்ந்து வாகன ஓட்டிகளுக்கு நிழல் தருகின்றன. இந்த மரங்களை ஒட்டியும் சில இடங்களில் மரங்களின் நேர் மேலாகவும் உயரழுத்த மின் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வாறு மின் பாதை அமைப்பதை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டுக்கொள்வதில்லை. இதனால் நன்கு வளர்ந்துள்ள மரங்கள் கம்பிகளில் உரசுவதால் வெட்டப்படுகிறது. அதே வேளையில் மின்வாரிய ஊழியர்கள் கிளைகளை மட்டும் வெட்டாமல் மரங்களை வெட்டி சாய்க்கின்றனர். ஆகவே இடையூறு ஏற்படுத்தும் கிளைகளை மட்டும் வெட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

    இதேப்போல் அவிநாசி-திருப்பூர் நெடுஞ்சாலையில் சாலையின் இருபுறமும் ஏராளமான மரங்கள் நடப்பட்டு நாள்தோறும் நெடுஞ்சாலை தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    இந்நிலையில் மின்வாரியத்தினர் பாராமரிப்பு பணிகள் மேற்கொண்டனர். அப்போது அவிநாசி திருப்பூர் சாலையில் சாலையோரம் வளர்ந்து வரும் நிலையில் இருந்த 10க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியதால் சமூக ஆர்வலர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    நெடுஞ்சாலையோரம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட மரங்கள் தற்போது நன்கு வளர்ந்து வரும் நிலையில் மின்வாரியத்தினர் மின் கம்பிகள் மீது படும் கிளைகளை மட்டும் வெட்டாமல் அடிப்பாகத்தையும் சேர்ந்து வெட்டியுள்ளது வேதனையளிக்கிறது என்றனர்.

    இதுகுறித்து மின்வாரியத்தினரிடம் கேட்ட போது, அனைத்து மரங்களிலும் கிளைகளை மட்டுமே வெட்டியுள்ளோம். கிளைகள் இல்லாத நேராக வளர்ந்து மின்கம்பி மீது உரசிய ஒரு மரம் மட்டுமே சிறிது கீழே பாகத்தில் வெட்டப்பட்டுள்ளது. பராமரிப்பு பணியின் போது அவசியம் கிளைகளை மட்டுமே வெட்ட வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றனர்.
    Next Story
    ×