search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சட்டமன்ற அலுவலக உதவி மையத்தை தொடர்பு கொண்டதால் கருப்பு பூஞ்சையில் இருந்து மீண்ட வாலிபர்

    முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலக உதவி மையத்தை தொடர்பு கொண்டதன்பேரில் அமைச்சர் ராஜகண்ணப்பன் உடனடி நடவடிக்கையால் கருப்பு பூஞ்சையில் இருந்து வாலிபர் மீண்டார்.
    சாயல்குடி:

    சாயல்குடி அருகே அவத்தாண்டை ஊராட்சி குருவாடி கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி மகன் முத்துப்பாண்டி (வயது28). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். மீண்டும் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கருப்பு பூஞ்சை தாக்கியது தெரிய வந்தது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு தாமதம் செய்தனர்.

    இதனை அறிந்த வாலிபரின் பெற்றோர் முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலக உதவி மற்றும் புகார் மனுக்கள் மையத்தின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துச்சொல்லி உதவி கோரினர்.

    இந்த கோரிக்கை உடனடியாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. நிலைமையை கேட்டறிந்த அமைச்சர் உடனடியாக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு தொடர்புகொண்டு சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் பேசி அந்த வாலிபருக்கு கருப்பு பூஞ்சைக்கான உடனடி சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அமைச்சரின் பரிந்துரையால் வாலிபர் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றி அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    தற்போது அவர் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள், பெற்றோர்கள் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்க உதவிய அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வாலிபரின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
    Next Story
    ×