search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 10,850 கன அடி நீர்வரத்து அதிகரிப்பு

    காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்த நிலையில், சீனி அருவி, ஐந்தருவி மற்றும் சிற்றருவிகளில் நீர்வரத்து குறைந்து பாறைகளாக காட்சியளித்தன.

    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரளா உள்ளிட்ட இரு மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அளவிலான கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடியும், கபினி அணையில் இருந்து 5,283 கன அடி என தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்ட உபரி நீரானது நேற்று தமிழக கர்நாடக எல்லையான ஒகேனக்கல் அருகேயுள்ள பிலி குண்டுலு வந்தடைந்தது.

    கடந்த சில நாட்காளக தமிழக காவிரி கரையோரப் பகுதிகளான, பிலி குண்டுலு, ஒகேனக்கல், அஞ்செட்டி நாட்ராம்பாளையம், கேரட்டி மற்றும் காவிரி கரையோரத்தில் சுற்றியுள்ள் வனப்பகுதியில் மழை பெய்து வந்தது. இதனால் அவ்வப்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், இந்த மாதத்தில் இருமுறை அதிகபட்சமாக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்து இருந்தது.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் 1,200 கன அடி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து கொண்டே வந்தது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்த நிலையில், சீனி அருவி, ஐந்தருவி மற்றும் சிற்றருவிகளில் நீர்வரத்து குறைந்து பாறைகளாக காட்சியளித்தன. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் சிறு குட்டை போல் தேங்கி காணப்பட்டது.

    தற்போது கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று தமிழக பகுதியில் உறைவிடமான பிலிகுண்டுலுவை கடந்து, நொடிக்கு 4 ஆயிரம் கன அடி யாக ஒகேனக்கல் பகுதிக்கு வந்தது.

    இந்நிலையில் நள்ளிரவு 8 மணியளவில் 7 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை 9 மணி நிலவரப்படி 10 ஆயிரத்து 850 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

    Next Story
    ×