search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நீட் தேர்வு குறித்த கவர்னர் உரை-கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு வரவேற்பு

    முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மூலம் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வறிக்கை தயாரிக்கப்படுகிறது.
    காங்கயம்:

    நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான சட்டங்களை நிறைவேற்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ஆளுநரின் உரைக்கு கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    சட்டப்படியான ஆய்வுக்குழு மூலம் ஆய்வுகள் எதுவும் செய்யாமல் நீட் விலக்கு சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றினால் குடியரசு தலைவர் ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்படும். நீதிமன்ற வழக்கையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

    அப்படி ஒரு நிலை வராமல் இருக்கவே முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மூலம் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வறிக்கை தயாரிக்கப்படுகிறது.

    இந்த குழு நீட் பாதிப்புகளை சுட்டிக்காட்டுவதோடு நீட் தேர்வுக்கு மாற்றாக பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கை முறையை பரிந்துரைக்க வாய்ப்பு உள்ளது. இந்த வழிமுறையை தமிழ்நாடு அரசு பின்பற்றக்கூடும்  என்று ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள அறிவிப்பை வரவேற்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×