search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தரமான இறைச்சி கிடைக்காமல் தவிக்கும் பொதுமக்கள்

    டாக்டர்கள் பரிசோதனை செய்து சீல் வைத்து, பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.
    உடுமலை:

    மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பல லட்சம் ரூபாய் செலவில், நவீன ஆடுவதை கூடங்கள் கட்டப்படுகிறது.இறைச்சிக்காக தேர்வு செய்யப்படும் ஆடுகள் முந்தைய நாள் வதை கூடத்தில் சேர்க்கப்படும்.அடுத்த நாள் கால்நடை டாக்டர்கள் இறைச்சிக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகளைப்பரிசோதித்து‘நலமாக உள்ளது’ என தெரிவித்தால் மட்டுமே இறைச்சிக்காக ஆடுகள் வதை செய்யப்படும்.

    பின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பில் உள்ள டாக்டர்கள் பரிசோதனை செய்து சீல் வைத்து, பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.பெரும்பாலான இறைச்சிக்கடைக்காரர்கள் இதுபோன்ற விதிகளைப்பின்பற்றுவது கிடையாது.

    இதேபோல் உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களிலும் ஆடுவதைக்கூடம் இல்லாததால் திறந்தவெளியில் அவைகள் வதை செய்யப்படுகின்றன.தரமான இறைச்சி கிடைப்பதை உறுதி செய்ய முடியாமல் பலரும் பரிதவித்து வருகின்றனர்.
    Next Story
    ×