search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    மேட்டூர்:

    கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கபினி அணை உள்ளிட்ட அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. எனினும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 91.40 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 535 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×