search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விதிகளை மீறி நடக்கும் சுபநிகழ்ச்சிகள்

    விழாக்களை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்தினர் அல்லது சுகாதாரத்துறையினர் கண்காணிக்க வேண்டும்.
    அவிநாசி:

    தமிழகத்தில் திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் தொற்று பாதிப்பு குறையாததால் சில தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் காய்கறி, மளிகை கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது ஒர்க்ஷாப் உள்ளிட்ட சில கடைகளுக்கு அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது. திருமணம் உட்பட சுப நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

    ஆனால் திருப்பூர் நகர மற்றும் கிராமங்களில் உள்ள மக்கள் மண்டபங்களை தவிர்த்து தங்கள் வீடுகளிலேயே திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த தொடங்கியுள்ளனர்.அதுவும் தங்களது உறவினர், நண்பர்களை வரவழைத்து விமரிசையாக நடத்துகின்றனர்.

    சில நிகழ்ச்சியில் சமூக இடைவெளி, முக கவசம் அணிவது உள்ளிட்ட தொற்று தடுப்பு நடவடிக்கைகள் எதையும் பின்பற்றுவதில்லை.இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

    எனவே விழாக்களை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்தினர் அல்லது சுகாதாரத்துறையினர் கண்காணிக்க வேண்டும். தூய்மைப்பணி மேற்கொள்ளும் பணியாளர்கள் ஊரடங்கு விதிமீறி நடத்தப்படும் நிகழ்ச்சிகள் குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  

    Next Story
    ×