search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரோன் கேமிரா
    X
    டிரோன் கேமிரா

    ஆனைமலையில் டிரோன் கேமிரா மூலம் மதுவிலக்கு போலீசார் கண்காணிப்பு

    செமணாம்பதி பகுதியில் வனப்பகுதி அருகே கள்ளச் சாராயம் காய்ச்ச படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது இதையடுத்து டிரோன் கேமிரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அடுத்த செமணாம்பதி பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சப் படுகிறதா? என்பதை மதுவிலக்கு போலீசார் டிரோன் கேமரா மூலம் கண்காணித்தனர். தமிழகம் முழுவதும் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருந்தது இதனால் ஆங்காங்கே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக தெரியவந்தது.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த செமணாம்பதி பகுதியில் வனப்பகுதி அருகே கள்ளச் சாராயம் காய்ச்ச படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது இதையடுத்து டிரோன் கேமிரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மதுவிலக்கு டி.எஸ்.பி. சுந்தர்ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்னக் காமணன், ராஜபிரபு மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் டிரோன் கேமிரா மூலம் செமணாம்பதி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்ச படவில்லை என்பது தெரியவந்தது.

    Next Story
    ×