search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை உயர்நீதிமன்றம்
    X
    சென்னை உயர்நீதிமன்றம்

    கொரோனா மரண சான்றிதழ்: நிபுணர் குழு கொண்டு ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    கொரோனா காலத்தில் இணை நோயால் இறந்தவர்களுக்கு கொரோனா இறப்பு சான்றிதழ் வழங்கப்படாததால், நிவாரண நிதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    இந்தியாவை கொரோனா தொற்று உலுக்கி வருகிறது. குறிப்பாக 2-வது அலையில் பலி எண்ணிக்கை அதிகம். தாய்- தந்தையை இழந்து ஏராளமான குழந்தைகள் பரிதவித்து வருகின்றன. வருமானம் ஈட்டிக் கொடுத்த மகனை இழந்து பெற்றோர் கஷ்டப்படுகிறார்கள்.

    மாநில மற்றும் மத்திய அரசுகள் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி, கல்வி கட்டணம் போன்றவற்றை வழங்க உறுதி அளித்துள்ளது.

    ஆனால், கொரோனா மரணம் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நாடு முழுவதும் உள்ளது. இந்த நிலையில் கொரோனா மரணம் என இறப்பு சான்றிதழ் வழங்கப்படாததால், நிவாரணம் மறுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது தலைமை நீததிப கொண்ட அமர்வு ‘‘நாடு முழுவதும் கொரோனா மரணம் முறையாக பதிவு செய்யப்படவில்லை. கொரோனா காலத்தில் இணை நோயால் இறந்தவர்களின் சான்றிதழ்களை நிபுணர் குழு கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். மரணம் குறித்த பதிவுகள் தெளிவாக இருந்தால்தான் நிவாரணம் வழங்க உதவியாக இருக்கும்’’ என்ற கருத்து தெரிவித்தது.

    மேலும், தமிழக அரசு ஆய்வு குறித்த ஆரம்பகட்ட அறிக்கையை ஜூன் 28-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
    Next Story
    ×