search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு நடத்தியபோது எடுத்தபடம்.
    X
    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு நடத்தியபோது எடுத்தபடம்.

    கயத்தாறு தாலுகாவில் கொரோனா நோயாளிகள் வீடுகளில் கலெக்டர் ஆய்வு

    கயத்தாறு அருகே கொரோனா நோயாளிகள் வீடுகளுக்கு சென்று கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
    கயத்தாறு:

    கயத்தாறு தாலுகா அலுவலகத்துக்கு நேற்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வந்தார். அங்கு தாலுகா பகுதியில் கொரோனா தொற்று பரவல் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் யூனியன் அலுவலகத்துக்கு சென்ற அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    அங்கிருந்து கயத்தாறு அருகேயுள்ள ஆசூர் பஞ்சாயத்தை சேர்ந்த தளவாய்புரம் கிராமத்திற்கு சென்ற கலெக்டர், அங்கு ஒரே தெருவில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு குறித்து கேட்டார். கொரோனா நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அந்த வீடுகள் மட்டுமின்றி, தெருக்களில் தினமும் கிருமிநாசினி தெளிக்கவும், கொரோனா தடுப்பு பணிகளையும் தீவிரப்படுத்தினார்.

    இடைசெவல் கிராமத்தைச் சென்று அங்கு மறைந்த எழுத்தாளர் கீ.ராவுக்கு மணிமண்டபம் கட்ட இருக்கும் இடத்தை ஆய்வு செய்த கலெக்டர், கி.ரா. படித்த பள்ளியையும் பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஊரக வளர்ச்சித் துறையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாராயணன், தாசில்தார் பேச்சிமுத்து, வட்டார வளர்ச்சி ஆணையாளர் அரவிந்த், கிராம வளர்ச்சி அலுவலர் சுபா, மற்றும் உதவி செயற்பொறியாளர் ரெஜினால்ட், யூனியன் பொறியாளர்கள் நமச்சிவாயம், செல்வபாக்கியம், நசீர் மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சீனிவாசன், பாலசுப்பிரமணியன் மற்றும் பொறியாளர்கள் அலெக்ஸ், சித்ரா, ஆகியோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×