search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

    பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க கோரி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் தலைமையில் நவநீதகிருஷ்ணன், செந்தில், ஆதி மூலம் மற்றும் விவசாயிகள் முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தி னார்கள்.

    அப்போது விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அலுவலக தலைமை எழுத்தர் நிஷாந்தினியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை விவசாயிகள் கொடுத்தனர்.

    அந்த மனுவில் விவசாயிகள் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2020- 21 ஆம் ஆண்டு கடும் மழை காரணமாக மகசூல் முற்றிலும் பாதிக்கப் பட்டது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்தனர். விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செலுத்தியுள்ளனர். அதற்குரிய காப்பீட்டுத் தொகை உடனடியாக வரக்கூடிய பருவ காலத்திற்கு முன்பு வழங்க வேண்டும். 2019 -20 பயிர் காப்பீட்டு தொகை இன்னும் பல விவசாயி களுக்கு வராமல் உள்ளது. அந்த காப்பீடு தொகையை உடனடியாக அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.

    கடந்த ஜனவரி மாதம் பெய்த தொடர் மழையால் விளைச்சல் பாதிக்கப் பட்டதால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் அரசு இழப்பீடு வழங்கி வருகிறது. தேர்தல் காரணமாக நிவாரணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக வழங்க வேண்டும். தவிர தோட்டக் கலைத்துறை மூலம் வழங்க வேண்டிய வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    Next Story
    ×