search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிணற்றில் தவறி விழுந்த முதியவர் மீட்கப்பட்டபோது எடுத்த படம்
    X
    கிணற்றில் தவறி விழுந்த முதியவர் மீட்கப்பட்டபோது எடுத்த படம்

    போடி அருகே 100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த முதியவர்

    போடி அருகே 100 அடி ஆழ கிணற்றில் தண்ணீர் இல்லாத நிலையில் உள்ளே விழுந்த பாலகிருஷ்ணன் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.
    போடி:

    போடி அருகே உள்ள பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் நேற்று ராசிங்காபுரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள 100 அடி ஆழ கிணற்றின் பக்கவாட்டு பகுதிகளில் வளர்ந்திருந்த செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக பாலகிருஷ்ணன் அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டார். கிணற்றில் தண்ணீர் இல்லாத நிலையில் உள்ளே விழுந்த பாலகிருஷ்ணன் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.

    இதற்கிடையே அவரது அபயகுரல் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி கிணற்றில் விழுந்த முதியவரை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

    பின்னர் அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


    Next Story
    ×