search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தாயம் விளையாடிய கிராமமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

    திருப்பூரில் ஊரடங்கு விதிகளை மீறியும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் தாயம் விளையாடியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
    திருப்பூர்:

    திருப்பூர் கோவில் வழி அருகே அமைந்துள்ள இந்திரா காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊரடங்கில் பொழுதை கழிக்க கிராமத்தில் உள்ள கோவில் மற்றும் ரேஷன் கடை உள்ளிட்ட இடங்களில் கூடி தாயம் விளையாடி வருகின்றனர். சமூக இடைவெளியின்றி ஒன்றாக அமர்ந்து விளையாடுவதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

    இதையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது கிராமத்தில் உள்ள ஆண்கள் குழு குழுவாக பிரிந்து இந்திரா காலனி பட்டத்தரசி அம்மன் கோவில் வளாகத்தில் தாயம் விளையாடி கொண்டிருந்தனர்.

    அதேபோல் பெண்கள் அதே பகுதியில் உள்ள ரேஷன் கடை முன்பு அமர்ந்து  தாயம் விளையாடினர். அவர்களிடம் போலீசார் கொரோனா பரவல் காரணமாகவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி  விளையாட வேண்டும் என்று அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×