search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடுமலை  திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் உடுமலை மாரியம்மன் கோவில்.
    X
    உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் உடுமலை மாரியம்மன் கோவில்.

    கோவில்கள் சார்பில் நோயாளிகளுக்கு உணவு

    உடுமலை அரசு மருத்துவமனையிலுள்ள பொதுமக்களுக்கு கோவில்கள் சார்பில் உணவு வழங்கப்படுகிறது.
    உடுமலை:

    அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் பக்தர்கள் பங்களிப்பு நிதியில் அன்னதானம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது  ஊரடங்கு காரணமாக, கோவில்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் கோவில் அன்னதான திட்டத்தில் தயாரிக்கப்படும் உணவை அரசு மருத்துவமனையிலுள்ள நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு உணவு வழங்க உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் உடுமலை  திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் உடுமலை மாரியம்மன் கோவில் சார்பில்  உடுமலை அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெறுவோர், உடன் இருப்போர் மற்றும் பொதுமக்களுக்கு என தினமும் 300 பேருக்கு உணவு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.மிளகு சாதம், தக்காளி சாதம்,எலுமிச்சை சாதம், சாம்பார்சாதம், பருப்பு சாதம், தட்டை பயறு சாதம் என தினமும் ஒவ்வொரு வகையான சாதனங்கள், கோவில்களில் தயாரித்து பொட்டலமிட்டு, நேரடியாக கொண்டு  சென்று வினியோகம் செய்யப்படுகிறது.
    Next Story
    ×