search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)
    X
    கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

    திருச்சி மாவட்டத்தில் 3,26,326 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்

    திருச்சி மாவட்டத்தில் 18 முதல் 44 வயதினருக்கு 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    திருச்சி:

    தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து கையிருப்பு குறைந்துவிட்டால் 18 முதல் 44 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

    திருச்சி மாவட்டத்திலும் சிறப்பு முகாம்கள் மூலம் மேற்கண்ட வயதினருக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் வருகிற 3-ந்தேதி முதல் 3 நாட்கள் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    தற்போதைய நிலையில் 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் தயங்கியவர்கள் இறப்புகள் அதிகரித்ததால் கடந்த இரு வாரங்களாக தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

    திருச்சி மாவட்டத்தில் 18 முதல் 44 வயதினருக்கு 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

    இந்த மாவட்டத்தை பொறுத்தமட்டில் 2-ம் தவணை செலுத்திக்கொண்ட 64 ஆயிரத்து 845 பேர் உள்பட 3 லட்சத்து 26 ஆயிரத்து 326 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 15 சதவீதமாக இருக்கிறது.

    இதில் 18 வயது முதல் 44 வயது பிரிவினரில் 56 ஆயிரத்து 164 பேரும், 45-59 வயது பிரிவினரில் 82 ஆயிரத்து 572 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டடோர் பிரிவில் 77 ஆயிரத்து 637 பேரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

    மேற்கண்ட வயது பிரிவினரின் எண்ணிக்கை அடிப்படையில் முதல் பிரிவினரில் (18-44 வயது) 4 சதவீதம் பேரும், 2-ம் பிரிவினரில் 18 சதவீதம் பேரும், 3-ம் பிரிவினரில் 23 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    தற்போதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி பற்றாக்குறையால் 18 முதல் 44 வயது பிரிவினருக்கான சிறப்பு முகாம்கள் நேற்று முன்தினம் முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதுபற்றி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராம் கணேஷ் கூறும்போது, தற்போது குறிப்பிட்ட அளவே மருந்து கையிருப்பு உள்ளது. ஏற்கனவே உள்ள மணப்பாறை, திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடர்ந்து வருகிறோம். மீண்டும் தடுப்பூசி மருந்து வந்த பின்னரே சிறப்பு மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும். 2-வது தவணைக்கான கோவேக்சின் தடுப்பூசி மருந்து மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×