என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  ஊராட்சி எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா கிராமங்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
  உடுமலை:

  உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த வருவாய் மற்றும் சுகாதாரத் துறையால் பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கிராமப்பகுதிகளில் ஊராட்சித்தலைவர், வி.ஏ.ஓ., ஊராட்சி செயலாளர், கிராம செவிலியர், காவல் அலுவலர் என 5 பேர் கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

  இவர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு நடத்தி வருகின்றனர். வரும் நாட்களில் நோய் பாதிப்பு அதிகரித்தால் உடனடி சிகிச்சை அளிப்பதற்காக ஊராட்சி அளவில் மையம் அமைக்கவும் இடம் தேர்வு செய்து வருகின்றனர். 

  இது குறித்த ஊராட்சித் தலைவர்கள் கூறுகையில்,
   
  வீடு, வீடாகச்சென்று கணக்கெடுத்து படிவத்தில் பூர்த்தி செய்யப்படும். கிராம ஊராட்சி அளவில் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு போதிய குடிநீர், மின்சாரம், கழிப்பிட வசதி செய்து தரப்படும்.நோயாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட உள்ளது. அதற்கான தொகை தனியார் பங்களிப்பு அல்லது கிராம ஊராட்சி பொது நிதியில் இருந்து பெறுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல் ஊராட்சி எல்லைகளில்  கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். 

  இனிவரும் ஒரு வார காலத்திற்கு வெளியாட்கள் யாரும் ஊராட்சிக்குள் நுழையாதவாறும் ஊராட்சியில் உள்ளவர்கள் தேவையின்றி வெளியே வருவதையும் தடுக்கப்படும் என்றனர்.
  Next Story
  ×