search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் மாநகராட்சி அலுவலக அறையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட காட்சி.
    X
    திருப்பூர் மாநகராட்சி அலுவலக அறையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட காட்சி.

    திருப்பூரில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.இதற்காக வீடுகள் தோறும் சென்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில்  நேற்று ஒரே நாளில் 2ஆயிரத்து 74 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு  ஏற்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54,524ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 34 பேர் நேற்று பலியாகினர்.இதனால் பலி எண்ணிக்கை   413ஆக உயர்ந்துள்ளது.தொற்று பாதிக்கப்பட்ட 16,062 பேர்  திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
     
    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை ஆயிரத்திற்குள் இருந்த தொற்று பாதிப்பு  தற்போது 2 ஆயிரத்தை நெருங்கி 2 மடங்காக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் தொற்று கட்டுக்குள் வரும் நிலையில் திருப்பூரில் அதிகரித்து வருவது பொதுமக்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து தடுப்புபணிகளை தீவிரமாக செயல்படுத்த திருப்பூர் மாவட்டத்திற்கு வேளாண்மைத்துறை செயலாளர் சமயமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் இன்று திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கிராமப் புறங்களில் அதிக அளவில் தொற்று பாதிப்பு உள்ளது.இதையடுத்து அங்கு தனிமைப் படுத்துதல் மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.தொற்று பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் வெளியே செல்லாமல் இருக்க கட்டுப்பாடு பகுதிகள் தகரத்தால் அடைக்கப்பட்டுள்ளது.
     
    மேலும் யாருக்காவது தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய இன்று முதல் அங்கன்வாடி-சத்துணவு பணியாளர்கள் வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்கின்றனர்.கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ பணியாளர்கள் நியமிப்பதற்கான ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டுள்ளது.கொரோனா கட்டுப்பாடு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
      
    இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுக்கள் அமைத்து கலெக்டர் விஜயகார்த்திக்கேயன் உத்தரவிட்டுள்ளார்.இக்குழுவினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட  உள்ளனர்.
    Next Story
    ×