search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஊராட்சிகளில் தனிமைப்படுத்துதல் மையம்

    கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் தனிமைப்படுத்தும் வசதி இல்லாதவர்களுக்காக அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சிகளிலும் தனிமைப்படுத்துதல் மையம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
    அவிநாசி:

    கிராமப்புறங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு  வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான சூழல் இருக்காது. அதற்கான வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் பணியில்  ஊராட்சி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன.

    அதன்படி அவினாசி ஊராட்சி ஒன்றியத்தில் 3, 6 மற்றும் 12 வார்டுகளை உள்ளடக்கிய மக்கள் தொகைக்கு ஏற்பவகைப்படுத்தப்பட்டு குறைந்தபட்சம் ஐந்து முதல் அதிகபட்சம்  25 படுக்கையுடன் தனிமைப்படுத்துதல் மையங்கள் ஆங்காங்கே உள்ள அரசு பள்ளி மற்றும் சமுதாயக் கூடங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து வட்டார வளர்ச்சி அதிகாரி ஹரிஹரன் கூறுகையில், கிராமங்களில் தனிமைப்படுத்தும் மையங்களை அமைக்கும் பணி  முழுவீச்சில் நடந்து வருகிறது.மேலும், அந்தந்த வார்டு உறுப்பினர்களின் மேற்பார்வையில் வீடுகள் தோறும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்று சேர்க்கும் பணியும் உறுதி செய்யப்பட்டு வருகிறது என்றார்.
    Next Story
    ×