search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் சுல்தான் பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் அலைமோதிய பொதுமக்கள்.
    X
    திருப்பூர் சுல்தான் பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் அலைமோதிய பொதுமக்கள்.

    ரேஷன் கடைகளில் அலைமோதும் பொதுமக்கள்

    திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுவதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    உடுமலை:

    கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைத்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் அரிசி ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் கொரோனா நிவாரண தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    இதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம், கடந்த 15-ந்தேதிமுதல் முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. உடுமலை தாலுகாவில் 127 முழுநேர ரேஷன் கடைகள், 56 பகுதி நேர ரேஷன் கடைகள் எனமொத்தம் 183 ரேஷன் கடைகள் உள்ளன.அரிசி வாங்கும் ரேஷன் அட்டைகள் 1 லட்சத்து 6 ஆயிரத்து 30 உள்ளன. இதில் கடந்த 22-ந்தேதி வரை 1 லட்சத்து 3 ஆயிரத்து 146 ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டிருந்தது.

    இந்த நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வந்ததால் கடந்த 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.பெரும்பாலான ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டு விட்டதை தொடர்ந்து கடந்த 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நிவாரண தொகை மட்டுமல்லாது அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டன.

    இந்தநிலையில் இந்த மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை வினியோகிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து உடுமலை தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.இதேப்போல்  திருப்பூர், தாராபுரம், காங்கேயம், குடிமங்கலம் உள்ளிட்ட அனைத்து  பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளிலும் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

    ஊரடங்கு காரணமாக வேலையிழந்துள்ளதால் குடும்ப அட்டைதாரர்கள் ஏராளமானோர் ரேஷன் பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ரேசன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதன் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளது.

    எனவே கூட்ட நெரிசல் இல்லாமல்  பொதுமக்களுக்கு பொருட்களை விநியோகிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×