search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார்த்தீனியம் செடிகள்
    X
    பார்த்தீனியம் செடிகள்

    விளைநிலங்களை ஆக்கிரமிக்கும் பார்த்தீனியம் செடிகள்

    உடுமலை பகுதியில் விளை நிலங்களை ஆக்கிரமித்து வளரும் பார்த்தீனியம் செடிகளை அழிக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் விளை நிலங்கள், சாலைஓரங்கள் நீர்நிலைகள் என எங்கும் பார்த்தீனியம் செடிகளின் ஆதிக்கம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது. 

    இந்த செடிகளால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. மனிதனுக்கு சொறி, சிரங்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட ஒவ்வாமையை ஏற்படுத்துவதோடு கால்நடைகளுக்கு உடல் சார்ந்த சிக்கல்களையும் ஏற்படுத்தி வருகிறது.அதை ஒழிக்கும் முறையை முழுமையாக தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். 

    ஆண்டுக்கணக்கில் போராடினால் மட்டுமே அதன் பரவலை தடுத்து நிறுத்த முடியும். பின்பு அதனை எளிதில் அழித்துவிடலாம்.இதற்காக விவசாயிகளுக்கு தோள் கொடுத்து பார்த்தீனியம் செடிகளை ஒழிப்பதற்கு வேளாண்துறையினர் வழிகாட்ட வேண்டும். இது சம்பந்தமாக தொடர்ந்து விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.இல்லையென்றால் இன்னும் பல நூற்றாண்டு காலம் ஆனாலும் பார்த்தீனியம் செடிகளை அழிக்க முடியாது.

    எண்ணற்ற விவசாயிகளின் முன்னேற்றத்திற்கும், வருமான இழப்புக்கும் பெரும் தடைக்கல்லாக உள்ள இந்த செடிகளை ஒழிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×