என் மலர்

  செய்திகள்

  திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில்.
  X
  திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில்.

  திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேர்த்திருவிழா ஒத்திவைக்கப்பட்டாலும் திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் ஆகம விதிமுறைப்படி, விஷேச பூஜைகள் நடந்து வருகின்றன.
  திருப்பூர்:

  திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்களில் வைகாசி விசாகத்தேர்த்திருவிழா விமரிசையாக  நடைபெறும்.முதல்நாள் விஸ்வேஸ்வர சுவாமி தேரோட்டமும், மறுநாள் வீரராகவப்பெருமாள் தேரோட்டமும் நடைபெறும். கொரோனா ஊரடங்கு காரணமாக  கடந்த ஆண்டு தேர்த்திருவிழா நடைபெறவில்லை.

  இந்தாண்டும் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், தேரோட்டம் நடைபெறாது.தேர்த்திருவிழா நடைபெறாவிட்டாலும், ஆகம விதிமுறைப்படி விழாக்கால பூஜைகளை மட்டும் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வைகாசி பவுர்ணமி நாளில் விஸ்வேஸ்வர சுவாமி தேர்த்திருவிழா நடைபெறும். முந்தைய நாள், சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அந்தவகையில், விஸ்வேஸ்வரர்-பார்வதிதேவி மற்றும் விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.மேலும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், உற்வசமூர்த்திகளுக்கான அலங்கார பூஜைகளும்  நடைபெற்றன.
  Next Story
  ×