search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.
    X
    கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

    18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முகாம் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

    காயல்பட்டினத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி முகாமை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நேற்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. முகாமிற்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ்சிங், காயல்பட்டினம் நகரசபை ஆணையாளர் சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தடுப்பூசி போடும் முகாமினை தொடங்கி வைத்தார். இதில் 160 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    கொரோனாவை கட்டுப்படுத்த வேறுவழியின்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதேசமயம் முழு ஊரடங்கு காலத்தில் காலை 8 மணி முதல் 12 மணி வரை ஒவ்வொரு இடங்களிலும் காய்கறிகள், பழங்களை, மக்களுக்கு வீடு தேடி விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காயல்பட்டினத்தில் நகரசபை ஆணையாளர் பரிந்துரையின் பேரில் வாகனங்களில் காய்கறிகளை வீடுகள் தேடி சென்று பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். இதேபோல் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம், உடன்குடி ஊராட்சி ஒன்றியம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம், ஆகிய பகுதிகளை சேர்த்து 102 வாகனங்களுக்கு இது போன்று நேரடியாக காய்கறிகள் விற்பனை செய்வதற்கான பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த வண்டிகளில் காய்கறியுடன் சேர்த்து முட்டை, மீன், சிக்கன், போன்றவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வண்டியில் விலைப்பட்டியல் வைக்கப்படும். அனுமதி இல்லாத வேறு எவரும் வியாபாரம் செய்ய முடியாது.

    இதில் ஏதேனும் குறைபாடுகளோ, அல்லது காய்கறிகள் தேவையோ இருப்பின் 9750699214, 8122257972, மற்றும் 04639280 224 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தேவையான காய்கறிகளை அந்த பகுதிக்கு அனுப்புவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும். .அரசுடன் மக்களும் இணைந்து பணியாற்றினால் தான் தமிழகத்தை விட்டு கொரோனா வை விரட்ட முடியும். விலைவாசி கட்டுப்படுத்தப்படும். அதிக விலை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழக முதல்வர் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் முகாமை திருப்பூரில் தொடங்கி வைத்தார். இன்று காயல்பட்டினத்தில் நான் தொடங்கி வைத்துள்ளேன்.இந்த முகாமில் இளைஞர்கள் மிக ஆர்வத்தோடு வந்து தடுப்பூசிகள் போட்டுள்ளனர். நம்முடைய உயிரை காப்பதற்கான முழு ஆயுதமே தடுப்பூசி ஒன்றுதான். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் திருச்செந்தூர் தாசில்தார் பொறுப்பு ராமச்சந்திரன், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் போஸ்கோ ராஜன், காயல்பட்டினம் நகரசபை சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம், காயாமொழி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் அஜித், அகல்யா, சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன், காயல்பட்டணம் புறநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பர்வீன் பாத்திமா, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை பொது செயலாளர் நவாஸ், காயல்பட்டினம் அனைத்து சமுதாய கூட்டமைப்பு நிர்வாகி ராயல் கண்ணன்,

    தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், காயல்பட்டினம் நகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ஏ.முத்து முஹம்மது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஓடை சுகு, காயல்பட்டினம் நகர துணை செயலாளர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×