search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி

    கோவை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 10 மையங்களில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

    கோவை:

    18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருப்பூரில் தொடங்கி வைக்கிறார்.

    கோவை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 10 மையங்களில் இன்று முதல் தடுப்பூசி போடப்படுகிறது. கோவை மாநகராட்சி பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி, வரதராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, குனிய முத்தூர் அரசு மேல் நிலைப் பள்ளி, ராமலிங்கம் காலனி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, மணியக்காரம் பாளையம் மாநகராட்சி தொடக்கபள்ளி ஆகிய மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

    ஊரகப்பகுதிகளில் தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் பூலுவப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, சூலூர் வட்டாரத்தில் சின்னியம்பாளையம் இ-சேவை மையம், பெரியநாயக்கன் பாளையம் வட்டாரத்தில் அரசு ஆஸ்பத்திரி, பொள்ளாச்சி நகராட்சியில் நாச்சி முத்து மகப்பேறு மையம், மேட்டுப்பாளையம் நகராட்சியில் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரி ஆகிய இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

    தடுப்பூசி போட செல்பவர்கள் ஆதார் அட்டையை கொண்டு வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×