search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனுப்பர்பாளையம் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிக்சை மையம்.
    X
    அனுப்பர்பாளையம் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிக்சை மையம்.

    அனுப்பர்பாளையம் அரசு பள்ளியில் கொரோனா சிகிச்சை மையம்

    திருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு பள்ளியில் 150 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் நாளை முதல் செயல்பட உள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் உள்ள அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் தொழில் அமைப்பினர் பங்களிப்புடன் ரூ.40 லட்சம் மதிப்பில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது.

    பள்ளியில் உள்ள 30 அறைகளில் ஒவ்வொரு அறையிலும் 5 படுக்கை வீதம் 150 படுக்கைகள் அமைக்கும் பணியும், ஒவ்வொரு அறையிலும் மின்விசிறி, மின் விளக்கு அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. 
    முதல் கட்டமாக ஐந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள்வாங்கி பொருத்தி உள்ளனர்.பள்ளி வளாகம் பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. 

    குடிநீருக்காக இரண்டு போர்வெல் அமைக்கப்பட்டு அதில் மோட்டார் பொருத்தும் பணி மற்றும் மொபைல் டாய்லெட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சிகிச்சைக்காக டாக்டர் மட்டும் செவிலியர்களை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இப்பணியை எம்.எல்.ஏ., செல்வராஜ் பார்வையிட்டார். நாளை முதல் செயல்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×