search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குழந்தைகளுக்கு சைல்டுலைன் உதவிக்கரம்

    கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு சைல்டுலைன் உதவிக்கரம் நீட்டியுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரும் பாதிக்கப்பட்டு அல்லது இழந்து ஆதரவின்றி தவிக்கும் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலமாக தங்குமிடம், உணவு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வசதிகள் செய்யப்படுவதாக சமூக பாதுகாப்பு துறையின்கீழ் வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு தெரிவித்துள்ளது.

    ஆதரவற்ற குழந்தைகளுக்கு உளவியல் ஆலோசனைகள், கல்வி, தங்குமிடம், உணவு ஆகிய வசதிகள் செய்து தரப்படுகின்றன. தற்காலிக அல்லது நிரந்தர பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படுவதுடன் மருத்துவ வசதிகளுக்கும் பரிந்துரை செய்யப்படும்.இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண் 633, 6-வது தளம், கலெக்டர் அலுவலகம், திருப்பூர்  0421-2971198 என்ற முகவரியிலோ, 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×