search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடுமலையில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட வனத்துறை பணியாளர்கள்.
    X
    உடுமலையில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட வனத்துறை பணியாளர்கள்.

    உடுமலையில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு

    உடுமலை வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு பெற்றது.
    உடுமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட  திருப்பூர் மாவட்டம்   உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரகங்களில் கடந்த  8-ந் தேதி முதல் கோடைகால வனவிலங்குகள் கணக் கெடுப்பு பணி நடந்தது. ஆனைமலை புலிகள் காப்பக உதவி இயக்குனர் கணேஷ்ராம் தலைமையில் இந்த  பணி நடைபெற்றது.

    மானுப்பட்டி பிரிவு, ஏழுமலையான் கோவில் சரகத்தில் நடந்த கணக்கெடுப்பு பணியின்போது, இக் குழுவினர், அப்பகுதியில் காட்டு யானைகளின் கூட்டங்களையும், காட்டு மாடுகள் மற்றும் செந்நாய் கூட்டங்களை நேரடியாக பார்த்து பதிவு செய்தனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், புலிகளின் கால்தடம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏராளமான சிறுத்தைகள், செந்நாய் கூட்டங்கள், 250க்கும் மேற்பட்ட யானைகள், 150க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள், மான் கூட்டங்கள் என வன விலங்குகளை  நேரில் பார்த்து பதிவு செய்துள்ளோம். இதன் மூலம்  வளமான வனமாக  ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது என்றனர்.
    Next Story
    ×