search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ரெம்டெசிவிர் மருந்தை ரூ.28 ஆயிரத்துக்கு விற்ற லேப்டெக்னீசியன் கைது

    கொரோனா சிகிச்சைக்கு உதவும் ரெம்டெசிவிர் மருந்து வாங்க கூட்டம் அலைமோதும் நிலையில், அந்த மருந்தை கள்ளச்சந்தையில் விற்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
    மதுரை:

    கொரோனா சிகிச்சைக்கு உதவும் ரெம்டெசிவிர் மருந்து வாங்க கூட்டம் அலைமோதும் நிலையில், அந்த மருந்தை கள்ளச்சந்தையில் விற்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. மதுரை மருத்துவக்கல்லூரியில் உள்ள குப்பை தொட்டியில் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கியதாக பரவிய வீடியோ விவகாரத்தில், ஒப்பந்த பணியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் மதுரையில் ரெம்டெசிவிர் ஒரு பாட்டில் மருந்தை ரூ.28 ஆயிரத்துக்கு விலை பேசி அதனை விற்ற 2 பேரை தனிப்படை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்த போது புதுவிளாங்குடியை சேர்ந்த இம்ரான்கான் (வயது 24) மற்றும் வெங்கடேசன் என்பது தெரியவந்தது.

    இதில் இம்ரான்கான் செல்லூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் லேப்டெக்னீசியனாக பணியாற்றி வந்துள்ளார். இந்த மருந்தை டாக்டர் ஒருவரிடம் வாங்கி வந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். ரெம்டெசிவிர் மருந்தை வாங்க ஆள் பிடித்துதரும் புரோக்கராக வெங்டேசன் இருந்துள்ளார்.

    இம்ரான்கானிடமிருந்து 3 பாட்டில் ரெம்டெசிவிர் மருந்து கைப்பற்றப்பட்டு இருக்கிறது. இதில் தொடர்புடைய டாக்டர் யார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×