search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் கிரண்குராலா ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
    X
    கலெக்டர் கிரண்குராலா ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    சிறுவங்கூரில் செயல்படும் கொரோனா சிகிச்சை மையத்தில் கூடுதல் படுக்கை வசதி - கலெக்டர் கிரண்குராலா ஆய்வு

    சிறுவங்கூரில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தில் கூடுதல் படுக்கை வசதி அமைப்பது குறித்து கலெக்டர் கிரண்குராலா ஆய்வு மேற்கொண்டார்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,500-ஐ தாண்டியது. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையத்தில் 850 பேர் சிகிச்சைபென்று வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 250 படுக்கை வசதிகள் உள்ளன.

    கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சிறுவங்கூர் சமத்துவபுரம் அருகில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கட்டிடம் கட்டும் வளாகத்தில் ஏற்கனவே இங்கி வந்த அரசு கலைக்கல்லூரி கட்டிடத்தில் கூடுதல் கொரோனா தடுப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இங்கு 200 படுக்கைகள் உள்ளன. இதில் 100 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளன.

    இந்த நிலையில் கொரோனா சிகிச்சை மையத்தில் கூடுதல் படுக்கை வசதிகள் அமைப்பது தொடர்பாக கலெக்டர் கிரண்குராலா நேற்று ஆய்வு செய்தார். அப்போது பொதுப்பணித்துறை (மருத்துவம்) செயற்பொறியாளர் மணிவண்ணன், உதவி செயற்பொறியாளர் சுப்பையா ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×