search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுறா மீன்கள்
    X
    சுறா மீன்கள்

    குளச்சல் விசைப்படகில் சிக்கிய சுறா மீன்கள்

    பீலி சுறா எனப்படும் சுறாக்களுக்கு மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் அவைகள் வெளிநாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    குளச்சல்:

    குளச்சல் கடல் பகுதியில் 300 விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் கட்டு மரங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. நேற்று கரை திரும்பிய 3 விசைப்படகில் சுமார் 5 டன் எடை கொண்ட சுறா மீன்கள் பிடிப்பட்டது. விசைப்படகினர் அதை குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் கரை சேர்த்தனர். பின்னர் துறைமுக ஏலக்கூடத்தில் வைத்து விற்பனை செய்தனர். ஒரு சுறா மீன் 30 கிலோ முதல் 100 கிலோ வரை எடை இருந்தது. இந்த மீனுக்கு கேரளா மற்றும் வெளிநாடுகளில் நல்ல மவுசு உள்ளது என மீனவர்கள் தெரிவித்தனர்.

    இதனால் குளச்சல் மீன் வியாபாரிகள் சுறா மீன்களை போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர். பீலி சுறா எனப்படும் சுறாக்களுக்கு மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் அவைகள் வெளிநாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நேற்று பிடிப்பட்ட சுறா சாதாரண சுறா என்பதால் அவை உணவுக்காக மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×