search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல் சினி பால்சில் தடையை மீறி குளித்த சுற்றுலாபயணிகளை படத்தில் காணலாம்
    X
    ஒகேனக்கல் சினி பால்சில் தடையை மீறி குளித்த சுற்றுலாபயணிகளை படத்தில் காணலாம்

    ஒகேனக்கல்லில் தடையை மீறி அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள்

    ஒகேனக்கல் சினி பால்சில் தடையை மீறி அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்தனர்.
    பென்னாகரம்:

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகள் வருகைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    இதனால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும் பஸ் நிலையம் அருவிக்கு செல்லும் நடைபாதை, முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடின.

    இருப்பினும் தடையை மீறி ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் குளித்தனர். மேலும் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதி செய்து தரப்படுவதாக உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டினர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் ஆலம்பாடி, மடம் செக்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்தி வெளியூர்வாசிகள் வராதவாறு தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    Next Story
    ×