search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு இருப்பதை கலெக்டர் பார்வையிட்ட காட்சி.
    X
    வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு இருப்பதை கலெக்டர் பார்வையிட்ட காட்சி.

    திருச்செங்கோடு வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கோபுரம்- கலெக்டர் பார்வையிட்டார்

    திருச்செங்கோடு வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்காணிப்பு பணி நடைபெறுவதை கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் அன்று வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் சீலிடப்பட்ட பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த அறைகளை சுற்றிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் தீயணைப்பு கருவிகள் மற்றும் தண்ணீர் நிரப்பப்பட்ட வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

    ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கான பாதுகாப்பு அறைக்கு எதிரே வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டு நிகழ்வுகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அகன்ற திரை கொண்ட டி.வி.க்கள் மூலமாக கண்காணிக்கப்படுவதுடன், அனைத்து நிகழ்வுகளும் 24 மணி நேரமும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவாகும் காட்சிகளை மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேற்று பார்வையிட்டார். மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்பகுதியில் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கோபுரம் (வாட்ச் டவர்) அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
    Next Story
    ×