search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரம் தொடங்கியபோது எடுத்த படம்.
    X
    தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரம் தொடங்கியபோது எடுத்த படம்.

    தர்மபுரியில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பிரசாரம்

    கொரோனா பாதிப்பை தடுக்க 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.
    தர்மபுரி:

    கொரோனா பாதிப்பை தடுக்க 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன பிரசாரம் தர்மபுரியில் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை தர்மபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி துறைத்தலைவர் இளங்கோவன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது. பக்கவிளைவுகள் இல்லாதது. இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வது அவசியம் என்று அவ்வை நகர், சாலை விநாயகர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வாகனம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிகளில் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சந்திரசேகரன், கள விழிப்புணர்வு அலுவலர் பிபின்நாத், உதவி அலுவலர் வீரமணி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×