search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 2 வாரத்துக்குள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் - மாவட்ட கலெக்டர் தகவல்

    தமிழ்நாட்டில் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் தொடர்ந்து நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது.
    திருவள்ளூர்:

    தமிழ்நாட்டில் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் தொடர்ந்து நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. நோய் தொற்று வேகமாக பரவி வருவதையும் பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    அதில், நோய் பரவலை கருத்தில்கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு 10-ந்தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

    வாடகை மற்றும் டாக்சி வாகனங்களில் ஓட்டுனர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு வரும் நபர்களை தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் அந்த பகுதியில் இருந்து வெளியில் வராத வகையில் காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களை கொண்டு 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

    நோய் பரவலை தடுக்கும் விதமாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அரசு மருத்துவ நிலையங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இரண்டு வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நோய் அறிகுறி இருந்தால் தாமதமின்றி உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.

    இதனை கடைபிடித்து கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
    Next Story
    ×