search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரே‌ஷன் அரிசி பறிமுதல்
    X
    ரே‌ஷன் அரிசி பறிமுதல்

    குமரிக்கு கடத்துவதற்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த 20 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்

    தூத்துக்குடி புறநகர் பகுதியில் ரே‌ஷன் அரிசி கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு தலைமையிலான போலீசார் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது தூத்துக்குடி புறநகர் பகுதியில் ரே‌ஷன் அரிசி கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புதூர்பாண்டியாபுரம் டோல்கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனுக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு ஒரு மினி லாரியில் சிலர் அரிசி மூடைகளை ஏற்றிக்கொண்டிருந்தனர். அந்த அரிசி மூடைகளை சோதனையிட்டபோது அவை ரே‌ஷன் அரிசி என்பதும், அதனை அவர்கள் கடத்தி செல்வதும் தெரியவந்தது.

    இதையடுத்து அந்த லாரி மற்றும் குடோனில் இருந்த சுமார் 20 டன் எடையிலான ரே‌ஷன் அரிசியையும், மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி டிரைவரான குமரி மாவட்டம் விளவங்கோட்டை சேர்ந்த அனீஸ்(வயது 26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பலரிடமும் ரே‌ஷன் அரிசி வாங்கி, குடோனில் பதுக்கி வைத்ததும், பின்னர் குமரி மாவட்டத்திற்கு கடத்த இருந்ததும் தெரியவந்தது.

    கடத்தலின்போது சிக்கிவிடாமல் இருப்பதற்காக லாரியின் பதிவெண்ணை மாற்றி போலியான பதிவெண்ணை ஒட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் பறிமுதல் ரே‌ஷன் அரிசி, டிரைவர் அனீஸ் ஆகியோரை உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×